திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் மத்திய கல்லூரியின் 67 வது ஆண்டு விழா நேற்றுமுன்தினம் (25) காலை 9 .15 மணிக்கு கல்லூரி அதிபர் சோ. பாக்கியேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
பிரதான நிகழ்வாக சேனையூர் மத்திய கல்லூரியிலிருந்து ஆரம்பமான நடைபவனி மூதூர் கிழக்கின் பிரதான வீதியின் ஊடாக சேனையூர், கட்டைபறிச்சான் , கடற்கரைச்சேனை வீதியின் ஊடாக சென்றது.
கல்வி அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், கல்லூரி பழைய மாணவர்கள் நடைபவனியில் கலந்து சிறப்பித்தனர்.
பேரணியில் தமிழர் கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையிலான நிகழ்வுகள் இடம்பெற்றதோடு வாகனங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.அத்தோடு கல்லூரி முன்னாள் அதிபர்களின் திருவுருவப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதன்போது சேனையூர் மத்திய கல்லூரியின் ஆயிரக்கணக்கான பழைய மாணவர்கள் தங்களது வகுப்புக்களை வேறுபடுத்திக்காட்டும் வகையில் மேலங்கிகளை அணிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பேரணியில் கலந்து சிறப்பித்தனர்.
(தம்பலகாமம் குறூப், அன்புவழிபுரம் தினகரன் நிருபர்கள் )
The post சேனையூர் மத்திய கல்லூரியின் 67 வது ஆண்டு நிறைவு விழா appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்