பேருவளை பாடசாலையில் 78 இலட்சம் ரூபா பெறுமதியான 13 கணினிகள் திருட்டு

பொலிஸார் தீவிர விசாரணை

பேருவளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 78 இலட்சம் ரூபா பெறுமதியான 13 கணினிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுகுறித்து, பொலிஸ் நிலையத்தில் பாடசாலை அதிபர் முறைப்பாடு செய்துள்ளார். இதனடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீண்ட வார விடுமுறைக்காகப் பாடசாலை மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) கூட்டமொன்றிற்காகப் பாடசாலை உதவியாளரால் பாடசாலை திறக்கப்பட்டுள்ளது .

இதன்போது ஆசிரியர் ஓய்வறையின் கதவு திறந்து கிடப்பதைக் கண்ட உதவியாளர் உள்ளே சென்று பாரத்தபோது கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டிருந்தமை தெரிய வந்தது.இது குறித்து பாடசாலை உதவியாளர் தொலைபேசியில் அதிபருக்கு தெரிவித்ததும், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. கடந்த 2021இல், கொரிய அரசாங்கத்திடமிருந்து இந்த கணினிகள் உதவியாகப் பெறப்பட்டிருந்தன. கணினி ஒன்றின் பெறுமதி 60,000 ரூபா எனவும் அதிபர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

The post பேருவளை பாடசாலையில் 78 இலட்சம் ரூபா பெறுமதியான 13 கணினிகள் திருட்டு appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்