எதிர்காலச் சந்ததிகளாவது நிம்மதியாக வாழக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம சேவகர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள சகவாழ்வு சங்கங்களுக்கு மாவட்ட மட்ட ஆலோசகர் சபை அமைத்தல் மற்றும் அவர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வுகள் கடந்த (25) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற் றது.
இந்நிகழ்வில் நீதி அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.இதில் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு உரையாற்றிய
அமைச்சர்: நாட்டைக் காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுவிப்பதற்காகத் தமிழர், சிங்களவர், பறங்கியர், முஸ்லிம்கள், மலேயர்கள் உட்பட சகலரும் ஒன்றிணைந்தனர்.இதனால், 1948 இல்,சுதந்திரம் கிடைத்தது.1972இல், அரசியலமைப்பை மாற்றி பூரண சுதந்திரத்தைப் பெற்றோம்.
இந்த ஒற்றுமையை அரசியல்வாதிகள் பிரித்து நாசமாக்கி அரசியல் செய்தனர். இதனால் நாட்டில் சமாதானம் இல்லாமலாகிவிட்டது.இந்நாட்டில் பிறப்பதே அதிஷ்டம் என்றிருந்தது.ஆனால்,
நாற்பது வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தால் இந்நாட்டில் பிறந்தது துரதிஷ்டம் என நினைத்தோம்.
கடந்த காலங்களில் கிராமங்கன் அழிக்கப்பட்டன, குண்டுகள் வைக்கப்பட்டன, வன்முறைகள் தலைவிரித்தாடின.
இந்நிலையில்தான்,நாற்பது வருடங்கள் வாழ்ந்தோம். அரசியல்வாதிகள் செய்த பெரும் தவறால் சமாதானம் இல்லாமல் போய்விட்டது. அரசியல் தலைவர்கள் சிலர் ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படுகின்றனர்.
எனவே,எல்லோரும் ஒன்றிணைந்து எதிர்காலச் சந்ததிகளாவது நிம்மதியாக வாழக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
The post எதிர்கால சந்ததிகளாவது நிம்மதியாக வாழ நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்