அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் 2024 வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று (26) பாடசாலை விளையாட்டு மைதானத்தில் கல்லூரி அதிபர் ஏ.ஜீ.பஸ்மில் (SLEAS) தலைமையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஆரம்ப நாள் நிகழ்வில், பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கலந்துகொண்டு இல்ல விளையாட்டிப் போட்டியை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார். மேலும் அதிதிகளாக ஓய்வு நிலை அதிபர்களான எம்.ஐ.சஹாப்தீன், ஏ.ஜீ.அன்வர், உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.ஜெமீல், கல்லூரி பிரதி மற்றும் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
(அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்)
The post அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்