சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் மற்றும் சமத்துவக் கட்சியின் தலைவர் சு. மனோகரன் ஆகியோர் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசியுள்ளனர். இச்சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இதன்போது கிளிநொச்சி மாவட்டம் உட்பட வடக்கின் தற்போதைய அரசியல் பொருளாதார நிலைமைகள், பிரதேச அபிவிருத்தி பற்றிக லந்துரையாடப்பட்டது. எதிர்கால அரசியல் செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
The post ஜனாதிபதியுடன் சமத்துவ கட்சியினர் சந்தித்து பேச்சு appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்