சம்பந்தப்பட்டோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் பணிப்பு
விமான சேவைகள் தாமதித்ததால், விமானப் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக துறைமுக, கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று அவசரமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது விமான சேவைகள் தாமதித்ததால் விமானப் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக அவர் அதிகாரிகளைக் கடிந்து கொண்டுள்ளார். விமான சேவை ஊழியர்கள் தாமதமாக கடமைக்கு வருகை தந்தமையே,பயணிகளின் அசௌகரியங்களுக்கு காரணமாக அமைந்ததாகவும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையில் அன்றைய தினம் நடந்தது என்ன என? அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதன் போது கேட்டறிந்தார்.
ஊழியர்களின் பற்றாக்குறையும் இதற்கு காரணம் என அவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து அதனை நிவர்த்தி செய்ய வேண்டியது யாரது பொறுப்பு என்றும் அவர் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார்.
அத்துடன் அன்றைய தினம் கடமையிலிருந்த உயரதிகாரி கரும பீடங்களில் சேவையாற்றும் 15 பேருக்கு விடுமுறை வழங்கி இருந்தமை தொடர்பிலும்
அமைச்சருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
தொழிற்சங்கங்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளின் அசமந்தப் போக்கு தொடர்பிலும் இதன் போது அமைச்சர் கடுமையாக சாடியுள்ளார்.
தேவையான சந்தர்ப்பங்களில் உத்தியோகத்தர்களுக்கு விடுமுறை வழங்காது, கரும பீடங்களில் அவர்களை சேவைக்கு அமர்த்த வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட அதிகாரியுடையது என்றும் அவர் இதன் போது சுட்டிக் காட்டியுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
The post விமான சேவைகளில் ஏற்பட்ட தாமதம்; அதிகாரிகளை கடிந்துகொண்ட அமைச்சர் appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்