அவுஸ்திரேலிய நிறுவனத்துடன் மின்சக்தி அமைச்சு ஒப்பந்தம்
யுனைடெட் பெற்றோலியம் அவுஸ்திரேலியா பிரை வேட் லிமிடெட், உள்ளூர் சந்தைகளில் பெற்றோலிய பொருட்களை வழங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன் அந்நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளது. அரசாங்கத்தின் சார்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்க்ஷனா ஜயவர்தன மற்றும் அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்ரோலியம் நிறுவனம் சார்பாக அந்நிறுவனத்தின் உரிமையாளர், எடி ஹேர்ஸ் (Eddie Hirsch) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் நாட்டின் 150 எருபொருள் நிறுவனங்களுக்கு எரிபொருள்கள் விநியோகிக்கப்பட உள்ளன. இதன்மூலம், அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான பெற்ரோலிய சில்லறை விற்பனையாளர் மற்றும் இறக்குமதியாளருக்கு நாடு முழுவதும் 150
எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிர்மாணிக்கவும் இதன்மூலம் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
The post நாட்டின் 150 நிறுவனங்களுக்கு எரிபொருள் வழங்க இணக்கம் appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்