ஆண் போல் நடித்து மாணவியை காதலித்த யுவதி கைது

அனுராதபுரம் – கலென்பிந்துனவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி இளைஞன் போல் நடித்து 15 வயது மாணவியுடன் காதல் உறவில் ஈடுபட்டு மாணவியின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் கிட்டத்தட்ட ஒரு வருடமாக காதல் உறவில் ஈடுபட்டு வந்த நிலையில், கைது செய்யப்பட்டபோதே யுவதி ஒருவர் இளைஞனாக வேடமணிந்து காதலித்தது மாணவிக்கு தெரியவந்துள்ளது.

கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய யுவதி சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவியுடன் காதல் உறவை வளர்த்துக்கொண்டுள்ளார்.

19 வயது யுவதி 15 வயது மாணவியிடம் தன்னை ஆண் என அறிமுகம் செய்துள்ளார். தொலைபேசியில் ஆண் ஒருவரின் குரலில் அழைத்து இந்த உறவைப் பேணி வந்துள்ளார். இந்த உறவு சுமார் ஒரு வருடமாக தொடர்ந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

The post ஆண் போல் நடித்து மாணவியை காதலித்த யுவதி கைது appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்