பல்லடத்திலும், மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன்; மோடி நெகிழ்ச்சி

பல்லடத்திலும் ,மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன். மகாராஷ்டிராவின் யவத்மாலுக்குச் புறப்படுவதற்கு முன் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இன்றைய (28) நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” எனப் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அத்துடன், பல்லடம் விழாவுக்கு வருகை தந்தது, மேடையில் பேசியது உள்ளிட்ட காட்சிகள் அடங்கிய வீடியோவையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, பாஜகவின் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவையொட்டி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று (27) நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சிக்கு புகழாரம் சூட்டினார், இண்டியா கூட்டணி கட்சிகள், நாட்டை கொள்ளையடிக்க முயற்சிப்பதாக கடுமையாக விமர்சித்தார்.

பின்னர் மதுரை சென்ற பிரதமர் மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில், “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்ததை பாக்கியமாக உணர்கிறேன்” எனத் தமிழில் பதிவிட்டிருந்தார்.

The post பல்லடத்திலும், மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன்; மோடி நெகிழ்ச்சி appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்