கல்முனை ஆதார வைத்தியசாலையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு அவ்வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
மகப்பேற்று வைத்திய நிபுணர் பி.ஏ.டீ.எல்.ரன்சிறியின் ஏற்பாட்டில் இச்செயலமர்வு நடத்தப்பட்டது. இதன்போது வைத்திய நிபுணர் ரன்சிறி தெரிவித்த போது, ‘பொறுப்புள்ள பெற்றோர்’ என்ற தலைப்பில் இச்செயலமர்வு நடத்தப்படுவதன் பிரதான நோக்கமானது சமூகத்துக்கு நல்ல பிள்ளைகளை உருவாக்க வேண்டுமென்பதற்காக. ஆகையால் ஆரோக்கியம், புத்திக்கூர்மை, நற்பண்பை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க மிகவும் உகந்த காலமே மகப்பேற்றுக் காலம். வயிற்றிலுள்ள பிள்ளையுடன் பெற்றோர் உரையாடுதல், நல்ல புத்தக வாசிப்பு உள்ளிட்ட நற்பண்புகளால் சிறந்த பிள்ளைகளை உருவாக்க முடியுமென்றார்.
The post கல்முனையில் கர்ப்பிணி தாய்மாருக்கு விழிப்புணர்வு appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்