தென்கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கு

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் நாளை (29) இடம்பெறவிருந்த 12 ஆவது சர்வதேச ஆய்வரங்கு, நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக நிர்வாக மற்றும் கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் முன்னெடுக்கின்ற தொடர்ச்சியான இரு நாட்கள் கொண்ட அடையாள வேலை நிறுத்தத்தின் காரணமாக, நாளை மறுநாள் (01) வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆய்வரங்கின் இணைப்பாளர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்ட குறித்த ஆய்வரங்கு திடீரென ஏற்பட்ட ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக அடுத்த நாளைக்கு ஒத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இருந்தபோதும் திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (01) இடம்பெறும் என்றும் ஏற்பட்டுள்ள தடங்கலுக்கு வருந்துவதாகவும் தெரிவித்தார்.

இடம்பெறவுள்ள “Digital Transformation for a Sustainable Future” எனும் தொனிப்பொருளிலான குறித்த 12 ஆவது சர்வதேச ஆய்வரங்குக்கு பிரித்தானியாவின் Gloucestershire பல்கலைக்கழகத்தின் Head of School of Computing and Engineering பேராசிரியர் கமால் விச்கோம் பிரதான பேச்சாளராக கலந்து கொள்ளவுள்ளார்.

குறித்த மாநாட்டில் 200 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஒலுவில் மத்திய விசேட நிருபர்

தென்கிழக்கு பல்கலையில் சர்வதேச ஆய்வரங்கு மாநாடு

The post தென்கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கு appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்