புர்கினா பாசோவில் கத்தோலிக்க தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அதே தினத்தில் பள்ளிவாசல் மீது இடம்பெற்ற தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
“கடந்த ஞாயிறு (25) அதிகாலை 5 மணிக்கு ஆயுதமேந்தியவர்கள் பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் பல டஜன் பேர் கொல்லப்பட்டுள்ளனர்” என்று பாதுகாப்பு தரப்பை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் காலைத் தொழுகைக்காக வந்த முஸ்லிம்களே கொல்லப்பட்டிருப்பதாக உள்ளூர் குடியிருப்பாளர் ஒருவர் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
இதே தினத்தில் வடக்கு புர்கினா பாசோவின் தேவாலயத்தில் ஆராதனையில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்து 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். புர்கினா பாசோவின் மூன்றில் ஒன்றுக்கும் அதிகமான பகுதி இஸ்லாமியவாத கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்ற பிராந்தியத்தில் பல ஆயுதக் குழுக்களும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
The post புர்கினாவில் பள்ளிவாசல், தேவாலயத்தில் தாக்குதல்கள் appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்