ரூ.ஐயாயிரத்தை ஒரு வாரத்துக்கு வழங்கவில்லை – விமல்!

கொரோனா வைரஸ் பரவுகின்றமையினால், தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மாவட்டத்திலுள்ள மக்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபா நிதியுதவியை, ஒரு வாரத்தில் செலவிட்டு, தற்போது ஒன்றும் கிடையாது என மக்கள் கூறுவதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் 5000 ரூபா நிதியுதவி ஒரு வாரத்தில் செலவிடுவதற்காக வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எதுவும் கிடையாது எனவும், அதனால் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்துவதாகவும் மனோ கணேஷன் நாடாளுமன்ற கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதையடுத்தே, விமல் வீரவங்ச இந்த விடயத்தை சபையில் தெரிவித்தார்.

The post ரூ.ஐயாயிரத்தை ஒரு வாரத்துக்கு வழங்கவில்லை – விமல்! appeared first on NewUthayan.

…read more

Source:: Uthayan